மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூஸ்ஸ சிறைச்சாலை பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை!

- Advertisement -

பூஸ்ஸ சிறைச்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிறைச்சாலைகளின் புதிய ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் போதைபொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளை பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டே பூஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைகூடங்கள் ஆறிலும் கிட்டத்தட்ட 200 கைதிகளுக்கும் மேற்பட்டவர்களை தடுத்து வைக்க முடியும் என்பதுடன், அவற்றில் தற்போது 50 கைதிகள் மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கூடங்களில் CCTV கெமராக்களை பொருத்துவதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைக்கூடங்களுக்கு வந்து செல்லும் நபர்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் இவ்வாறு CCTV கெமராக்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகளின் போது சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில், விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கெதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...

பதுளையில் ஜனாதிபதி வெளிளிட்ட முக்கிய அறிவித்தல்……

மக்களின் நலன் கருதி வாய்மூலமாக வழங்கப்படும் பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பணிப்புரையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயம்……

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பெரீஸ் நகரில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென  பரீஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல்தாரி...

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும்! மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு,...

Developed by: SEOGlitz