மெய்ப்பொருள் காண்பது அறிவு

லெபனானில் இருந்து நாடு திரும்பவுள்ள இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனைகள்!

- Advertisement -

லெபனானில் இருந்து நாடு திரும்பவுள்ள இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு லெபனான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாயுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற ஆலோசனைகளுக்கு அமைவாக இலங்கை லெபானினானில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச pcr  பரிசோதனைகளை மேற்கொள்ளவது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இலங்கைக்கான லெபனான் தூதுவர் Shani Calyaneratne Karunaratne மற்றும்  லெபனான் தொழிற்துறை அமைச்சர் Lamia Yammine ஆகியோருக்கிடையில் குறித்த கலந்தாலோசனை இடம்பெற்றுள்ளது.

இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட குறித்த கூட்டத்தில் இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ஒப்புக்கொண்டுள்ளதாக லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது

மேலும் கடந்த  4 ஆம் திகதி , லெபனான் அமெரிக்க டாலர் 20 / – ஐ தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டமையானது இலங்கை அரசாங்கத்திற்கு கணிசமான அளவு நிதியை மிச்சப்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒரே தடவையில் நடப்பதை நிறுத்தவே இவ்வாறு செய்தோம்: சுமந்திரன் விளக்கம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரேநாளில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள...

வன்முறை – தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பரிசுத்த பாப்பரசர் அழைப்பு!

வன்முறை மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு  பரிசுத்த பாப்பரசர் Francis ஈராக் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் Francis முதன்முறையாக இன்று ஈராக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே,...

கொரோனா தொற்றினால் மேலும் 4 உயிரிழப்புக்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு 10, இராஜகிரிய, கொழும்பு 08 மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு...

Developed by: SEOGlitz