த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு எதிர்வரும் 07ஆம் திகதி முதல் பணம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் அமைந்துள்ள 60 மக்கள் வங்கிக் கிளைகள் ஊடாக குறித்த நிதி வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு தமக்கு அருகில் உள்ள மக்கள் வங்கி கிளைகள் ஊடாக பணம் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.