- Advertisement -
அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யும் உரிமையாளர்களின் மணல் அகழ்வு அனுமதி ரத்து செய்யப்படும் என சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
சுரங்க பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதிக விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதனுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் மணல் அகழ்வு அனுமதி ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.