கொரோனா வைரஸினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எதிர்வரும் 11ஆம் 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
குறித்த மூன்று நாள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.