மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தேர்தல் திணைக்களம் தீர்மானம்!

- Advertisement -

எதிர்வரும் பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட 200 வாக்காளர்களை கொண்ட பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்போது வாக்காளர்கள் செயற்படும் விதம், அவர்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அமைவான விடயங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர்கள் கட்டாயம் முககவசம் பயன்படுத்த வேண்டும் என்பதினால், எவ்வாறு வாக்காளர்களை உறுதிப்படுத்துவது என்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள்  ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும்  பேனையை, எவ்வாறு அனைவருக்கும் வழங்குவது என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக  தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

மீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.

உலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

மேல் மாகாணத்தில் 800 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 86 நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் 878 நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz