மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இது எனது பூமி, இதை நான்தான் பாதுகாக்க வேண்டும்” – உலக சுற்றாடல் தினம் இன்று!

- Advertisement -

இலட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றை  எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும்  போராடிக் கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில் பூமித்தாய் தம்மைத்தாமே புதிப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அதற்குரிய இடங்களை மீட்டெடுத்து வருகிறது.

நாம் சுவாசிக்கும் காற்று,  பருகும் நீர்,  உண்ணும் உணவு, எமக்கு புத்துணர்வளிக்கும் சூரிய ஒளி இவை அனைத்தும் தவமின்றி இயற்கை எமக்களித்த வரம். இவை அனைத்தும் மனித இனத்துக்கு மட்டுமல்ல இந்த பூமியில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் இயற்கையின் கொடை.

- Advertisement -

இதற்கமைய, அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது பூமி மட்டும்தான் என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் வென்டெல் பெர்ரி ( Wendell Berry). உண்மைதான். பொதுவானதின் மீதுதான் பொதுவாக யாருக்கும் அக்கறை வருவதில்லை. சுற்றுச்சூழல் கூட அப்படித்தான்.

எனது என்று சொந்தம் கொண்டாடப்படும் விஷயங்களின் மீது மட்டுமே  அதீத அக்கறை கொள்ளப்படுகிறது. எங்கோ எவரோ விடும் தவறுகள் அனைத்து உயிரினங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றன.

ஒருகட்டத்தில் மனிதர்களின் செயல்கள் இயற்கையோடு பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால், மக்களின் சுயநலச் சிந்தனைகள் பொதுவான பூமியின் மீது பரிவுகொள்ளத் தடையாக இருந்தது. பல போராட்டங்கள், விளிப்புணர்வுகள் எல்லாம் கடந்து இறுதியில்  எனது என்ற சுயநலத்தையே ஆயுதமாகக் கையில் எடுத்தது ஐக்கிய நாடுகள் சபை.

“இது எனது பூமி, இதை நான்தான் பாதுகாக்க வேண்டும்” என்ற சிந்தனையை ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைக்கப் பெரும்பாடுபட்டார்கள். அப்படி விதைக்கப்பட்ட  சுற்றுச்சூழல் விழிப்புணர்வுதான் 44 ஆண்டுகளாக 183 நாடுகள் கொண்டாடும் உலக சுற்றுச்சூழல் தினமாக  உருவெடுத்துள்ளது.

ஆண்டுதோறும்  ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் கொண்டாட்டங்கள் முடிவடையும் தினமான  5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கென சூழலை அழித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானவற்றைத் தெரிவு செய்து அதை மூலப்பொருளாக வைத்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும்.  இதற்கமைய, இந்த வருடத்தில்  கருப்பொருளாக பல்லுயிர் பாதுகாப்பு-இயற்கைக்கான நேரம் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைப்பில் மனிதர்கள் ஒரு அங்கமாகவே இருக்கின்றோம். அதனால் மனிதன் மாத்திரம் தனித்து வாழ்ந்துவிட முடியாது. ஒவ்வொரு உயிரினமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துதான் இந்த அண்டம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

ஆனால், படைப்பிலேயே மிகவும் உன்னதமான உயிரினமான மனித இனம் அவ்வப்போது மனிதத்தை மறந்து செயற்படுகின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கப்போவது இந்தியாவின் கேரள  மாநிலத்தில் சைலன்ட் வேலி வனப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்ட சம்பவத்தை அன்றி வேறொன்றுமில்லை.

அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து  கர்ப்பமாக இருந்த யானைக்கு கொடுத்ததில், அதை உண்ட  யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த யானையுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் பரிதாமாக பலியானது.  மனிதர்களை நம்பி உணவு வாங்கி உண்டதைத் தவிர வேறு எந்தவொரு குற்றத்தையும் அந்த யானை செய்துவிடவில்லை.

பொதுவாக மனிதர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால் மிருகம் என்கிறோம். ஆனால் அந்த மிருகத்தை விட மோசமான செயல்களிலேயே இன்று மனிதர்கள் ஈடுபடுகின்றார்கள். சக மனிதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் அவர்கள் மீதுள்ள வன்மத்தை வளர்ப்பு பிராணிகள் மீது காட்ட முனைகின்றனர்.

எமது தேவைக்காக  பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மூலமாகவும் இயற்கையின் சமநிலையை சீர் குழைத்துக்கொண்டிருக்கிறோம். எமது அஜாக்கிரதை தான்தோன்றித்தனம் அத்தனையும் எமக்கெதிராக நாமே இயற்கையை திசைமாற்றும் செயற்பாடுகளாகும்.

அனைத்து உயிரினங்களுக்கும் உரித்துடைய இயற்கையை மனிதன் மட்டும் அனுபவிக்க வேண்டுமென நினைப்பது மிகப்பெரிய சுயநலம். இதற்கு இயற்கை நிச்சயம் என்றாவது ஒரு நாள் பதில் சொல்லியேத்தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…….!

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 131 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை

காசுமாலை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை…

ஆதித்ய வர்மா படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் அவரது சமூக வளைத்தளங்களில் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.  

நீதவான் நீதிமன்றத்தினால் அடைக்கலநாதனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவரை நாளை (24) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு...

பிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் ஆழ்ந்த சினிமா…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலாமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார். தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013...

Developed by: SEOGlitz