சுற்றாடல் அழிவு என்பது மனித இனத்தினது அழிவின் ஆரம்பம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்கால தலைமுறையினருக்கு சுற்றாடல் குறித்த சிறந்த அனுபவத்தினை வழங்கவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளதாகவும், அச்சுறுத்தல் அற்ற சூழலை அவர்களுக்கு விட்டுச்செல்ல வேண்டிய கடமையும் தற்போது அனைவராலும் உணரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பனிப்பாறைகள் உருகுதல், புவி வெப்பமடைதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் மனித நடவடிக்கைகளின் மூலம் ஏற்படும் நேரடி விளைவுகளாகும்.
கொவிட் 19 நோய்த் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடியானது முன்னொருபோதுமில்லாத வகையில் சூழல்பாதுகாப்பின் அவசியத்தினை நன்கு வலியுறுத்தியுள்ள சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.