மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொற்றுநோய்களைத் தடுப்பதில் இலங்கை வெற்றியடைந்து வருகின்றது : ஜனாதிபதி!

- Advertisement -

நாட்டில் சுகாதாரத்துறையினை மேலும் வலுப்படுத்துவதன்மூலம் நாட்டில் பிறக்கும் குழந்தைகளிற்கும் தரமான சுகாதார வசதிகளை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

வீடியோ காணொலி மூலம் இடம்பெற்ற பூகோளத் தடுப்பூசி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொவிட் 19 பரவல் தொடர்பாக குழந்தைப் பருவத்தில் இருந்தே தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை உலக சமூகத்துடன் இணைந்து இலங்கை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றது.

கடந்த 30 ஆண்டுகளில் தொற்றுநோய்களைத் தடுக்கும் முயற்சிகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றியினை தொடர்ந்தும் தக்கவைக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.

தற்போதைய காலகட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அவசியத்தினை உலக நாடுகள் உணர்ந்துள்ளன.

WHO உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் வரவேற்பதுடன் அவ்வாறான நம்பிக்கை மிக்க நிறுவனங்களுடன் நாம் தொடர்ந்து பயணிப்போம்.

இதனடிப்படையில்,எமது நாட்டினது ஒவ்வொரு குழந்தையினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நாம் தேவையான திட்டமுறைகளைக் கொண்டிருக்கின்றேம்.

எமது நாட்டில் தேசிய தொற்றுநோய்த் தடுப்புத் திட்டம் மிகவும் வலுவான நிலையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

விசேட கண்காணிப்புடன் கூடிய ஒழுங்குமுறைகளைக் கொண்ட தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் எமது நாட்டினது அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டுக் கெண்டிருக்கின்றன.

குறித்த வேலைத்திட்டங்களின் தரத்தினைத் தொடர்ந்தும் பேணுவதும்,தேவைப்படும் காலகட்டங்களில் உரிய தடுப்பூசிமுறைகளை எமது மக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இவ்வாறான நடவடிக்கைகளை நாம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரேனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 507 உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யெமனில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

யேமனின் தலநகர் Sanaa பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், ...

மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார். கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் கலந்துரையாடல்...

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியினால் இன்று முன்னெடுப்பு!

சொந்தக் காணிகள் அற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டடது. அரசாங்கத்தின் சுபீட்சமான...

உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கையின் பாகங்களை, அரசாங்கம் மறைக்க முற்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் 22 பாகங்களை, அரசாங்கம் மறைக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

Developed by: SEOGlitz