எதிர்காலத்தில் விமான சேவையின் ஊடாக நாட்டிற்கு வருகை தருவோரது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, விமான நிலையத்திலேயே ஆய்வகம் நிறுவப்படும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“விமான சேவையின் ஊடாக நாட்டுக்கு வருகை தருவோருக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு , விமான நிலையத்திலேயே ஆய்வகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
பி சி ஆர் பரிசோதனைகளின் பின்னர் விமான நிலையத்திலிருந்து நோயாளிகளை மருத்துவமனைக்கும் ஏனையோரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் சிலர் பரிசோதனைகளை மேற்கொள்ள மறுப்பு தெரிவிக்கின்றனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் காணப்படும் அதிகாரங்களின்படி, அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இதற்கு குறித்த நபர்களது அனுமதி தேவையில்லை.
இன்றையதினம் வரையில் சுமார் 71,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நான் ஒரு நாளைக்கு 1,500 முதல் 2000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்பட்டால் அவற்றை அதிகரிக்கலாம்.
இந்த சோதனைகள் தற்போது 20 ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
எமது நாடு சிறிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்பதால் , கொவிட் 19 வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் எமது பொருளாதாரம் செயலிழக்கும் நிலை உருவாகும்.
இதைத் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, குறித்த பரவாமல் தடுப்பதற்கு சுகாதாரத் துறை அளித்த வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.