மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்க திட்டம் : அமைச்சர் பந்துல!

- Advertisement -

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் ஒரு தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

விசேடமாக தொழிநுட்பவியல் பல்கலைக்கழகங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க, 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இணங்கியுள்ளது.

களுத்துறை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த வருடத்துக்குள் பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினத்தில் இருந்து இதுவரை, பல்கலைக்கழகங்களுக்கு 30 ஆயிரம் மாணவர்களை உள்வாங்கும் நடைமுறையே காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 60 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் இந்த நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு ஆய்வு, உயிரியல் ஆய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்கவும், தொற்றா நோய்கள், பரவுகின்ற தொற்று நோய்கள், ஒவ்வாமை நோய்கள் குறித்த அதி நவீன ஆராய்ச்சி ஆகியவற்றை அரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தந்போது அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, புதிய கட்டடங்களை நிர்மாணிக்காமல் இருக்கும் கட்டிடங்களை உச்ச அளவில் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆய்வு உபகரணங்களை கொள்வனவு செய்ய 400 மில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுவதன் ஊடாக, சர்வதேச பல்கலைக்கழங்களுடன், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை பரிமாற்றிக் கொள்ள முடிவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும்!

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பல சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கான காரணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும்,...

Developed by: SEOGlitz