மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் போது அவதானம் தேவை : பந்துல குணவர்தன!

- Advertisement -

த பினான்ஸ் நிதி நிறுவனம் மூடப்படுகின்றமை காரணமாக நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

- Advertisement -

“நிதி நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படுகின்றமை, மூடப்படுகின்றமை அல்லது முன்னைய நிலைமையின் அடிப்படையிலோ நாட்டின் இலட்சக்கணக்கான மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமை குறித்து பாரிய கலந்துரையாடலொன்றை நாம் முன்னெடுத்திருந்தோம்.

அனைத்து வைப்பாளர்களுக்கும் தலா ஆறு இலட்சம் ரூபா என்ற வகையில் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுவதாக, மத்தியவங்கியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொத்த வைப்பாளர்களில் 93 வீதமானோரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். ஆறு இலட்சம் ரூபாவை விட அதிகமாக வைப்பிலிட்டவர்கள் 7 வீதமானோர் உள்ளனர்.

இவர்களுக்கு உடனடியாக கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நிறுவனத்தை மூடும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்குள் கொடுப்பனவுகளை வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, நிதி நிறுவனங்களில் வைப்புகளை மேற்கொள்ளும் போது அவதானமாக செயற்பட வேண்டும்.

ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிடும்போது மத்திய வங்கியினால் ஆறு இலட்சம் ரூபா வரை மட்டுமே பொறுப்புக் கூறப்படும் என்பது எமது கலந்தரையாடல்களில் தெளிவாகியுள்ளது.

ஆகவே நாட்டில் உள்ள வைப்பாளர்கள் தமது பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்பிலிடும்போது, தமது பாதுகாப்பான எல்லை 6 இலட்ச ரூபா என்பதை அறிந்து கொள்வது முக்கியம் எனக் கருதுகிறேன்.

6 இலட்சம் ரூபா என்றாலும் வைப்பாளர் காப்புறுதி திட்டத்தின் கீழ் மத்தியவங்கியினால் அந்த பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அதிகமான பணத்தையே வழங்க முடியாதுள்ளது.

ஆகவே, எந்தவொரு வைப்பாளரும் தமது பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்பிலிடும்போது, அந்த நிறுவனங்களால் வழங்கப்படும் அதிக வட்டியை மாத்திரம் கருத்திற் கொள்ளாது தமது வைப்புக்கான பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒரே தடவையில் நடப்பதை நிறுத்தவே இவ்வாறு செய்தோம்: சுமந்திரன் விளக்கம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரேநாளில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள...

வன்முறை – தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பரிசுத்த பாப்பரசர் அழைப்பு!

வன்முறை மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு  பரிசுத்த பாப்பரசர் Francis ஈராக் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் Francis முதன்முறையாக இன்று ஈராக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே,...

கொரோனா தொற்றினால் மேலும் 4 உயிரிழப்புக்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு 10, இராஜகிரிய, கொழும்பு 08 மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு...

Developed by: SEOGlitz