மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

- Advertisement -

நாட்டில் ராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள்  கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் 13 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா , எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டீ  விக்ரமரட்ண,  மேஜர்  ஜெனரல் விஜித ரவிப்ரிய மேஜர்  ஜெனரல் ஜகத் அல்விஸ் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் ஹேவ வித்தாரண  உள்ளிட்ட 13 பேர்  அங்கம் வகிக்கின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு கீழ்  அரச சேவை இணைக்கப்பட்டுள்ளது. இதனூடாக  ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை செயற்படுத்த வேண்டும்.

எனவே  அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அரச சேவையாளர்களிடம் கேள்வி எழுப்புகின்றேன்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz