இந்த ஆண்டிற்கான இரண்டாவது சந்திரகிரகணம் நாளை நிகழவுள்ளது.
இதனை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் என, கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாளை இரவு 11.15 முதல் மறுநாள் அதிகாலை 2.34 வரை சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை உட்பட ஐரோப்பா, ஆசியநாடுகள், அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதனை அவதானிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டில் ஆறு சந்திரகிரகணங்கள் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.