மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு!

- Advertisement -

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தினூடாக குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

செயன்முறைப் பரீட்சையை தனியார்துறையினரும் முன்னெடுப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் 2017 ஆம் ஆண்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை இரத்து செய்து, செயன்முறைப் பரீட்சையை அரச துறையினர் மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சங்கத்தினால்  கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு அமைய, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதை இரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

மீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.

உலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

மேல் மாகாணத்தில் 800 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 86 நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் 878 நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz