மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்கட்டணப் பட்டியல் தொடர்பான விசேட அறிவிப்பு!

- Advertisement -

ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட மின்கட்டணப் பட்டியலில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு மற்றுமொரு சலுகையினை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் மின்சார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதன்பிரகாரம் ஏப்ரல் மாதத்தில் அதிக அளவிலான கட்டணம் குறிப்பிடப்பட்ட பட்டியல்களில் காணப்படும் வேறுபாடுகள் ஜூன் மாத பட்டியலில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செலுத்தப்படாத கட்டணப் பட்டியல்களுக்காக, மின்சார இணைப்பினை  துண்டிக்கும் நடைமுறை நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக கட்டணப் பட்டியல்களை கட்டம் கட்டமாக செலுத்த முடியும் எனவும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மின்சார சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு  எதிர்காலத்தில் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் 21 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் 21 மாவட்டங்களில  கடந்த 24 மணிநேரத்தில் 772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவற்றுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய...

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம்

அரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை   இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம்  பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான  அறிவிப்பு...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் 12 இடங்களில் ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து  வேறு மாகாணங்களுக்கு பிரவேசிக்கும் 12  இடங்களில் ரெப்பிட்  என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை  மேல்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து நடைமுறை!

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வு  காரணமாக கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி   ஜனவரி மாதம் 30 ஆம் திகதி...

AstraZeneca -Covishield தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

Developed by: SEOGlitz