கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று முதல் நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் அனைத்து சுற்றாடல் பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்தப் பகுதிகளை பரிசோதனைக்கு உட்படுத்தும் பணியில் பொது மக்கள், சுகாதார அதிகாரி, பொலிஸார், கழிவு முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஊழியர்களும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக நகரத்தில் அனைத்து வடிகான் கட்டமைப்பு, இயற்கை கழிவுப்பகுதி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு சுத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் இடங்கள் அடையாளங் காணப்பட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்ட்டுள்ளது.