மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த அரசாங்கத்தில் இருந்த சிலரால் அர்ஜூன் மகேந்திரனது கைது தடுக்கப்பட்டது : முன்னாள் ஜனாதிபதி!

- Advertisement -

ஜனாதிபதியின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சியானது பொறுப்பு வாய்ந்த தரப்பாக செயற்படும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“அர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆவணங்களும் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டன.

அந்த ஆவணங்களில் 21 ஆயிரம் ஆவணங்களுக்கு கையொப்பம்  வேண்டும் என சட்ட மா அதிபர் திணைக்களத்தினர் தெரிவித்தனர்,அதற்கு நான்  நேரத்தை ஒதுக்கி கையொப்பமிட்டேன் ஆனால் அதன் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.

அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாருக்கு அனைத்து ஆவணங்களுடனும் கடிதங்களை அனுப்பினோம்.

இதன் போது எங்களது அரசாங்கத்தில் உள்ள சிலரே இது அரசியல் பிரச்சினை இதனுடன் தொடர்புபட வேண்டாம் என சர்வதேச பொலிஸாருக்கு கடிதம் அனுப்பினர்.

அதனை சர்வதேச பொலிஸார் தமக்கு இவ்வாறு ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றிருப்பதால் இதில் தலையிட முடியாது என அறிவித்தனர்.

அதன் பின்னர் என்னால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களடங்கிய ஜனாதிபதி  ஆணைக்குழு,அரசியலமைப்பு பேரவை,சட்டமாஅதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அதிகாரங்கள் ஆகியவற்றை தௌிவுபடுத்தி விரிவாக நாங்கள் கடிதமொன்றை அனுப்பியதன் பின்னரே சர்வதேச பொலிஸார் அதனை ஏற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் அர்ஜீன் மஹேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டது” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின

நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பொரளை கின்ஸி வீதி, நொரிஸ் கெனல் வீதி ,கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை தும்முல்ல சந்தி மற்றும் ஆமர்...

Developed by: SEOGlitz