மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று?

- Advertisement -

ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

உண்மையில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் சுவாச நோய் காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்ள டிக்கோயா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

தற்போது நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு சமமான அறிகுறிகள் காணப்படும் வேறு நோய்த்தொற்று உள்ளவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவ்வாறானவர்களை நாள்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்துவோம். சமூகமட்டத்தில் ஏதேனும் நோய்காரணிகளுக்கு அமைவாக கொரோனா தொற்று ஏற்படுகின்றதா என்பதை அடையாளப்படுத்தவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நடைமுறையின் அடிப்படையில் குறித்த ஊடகவியலாளருக்கும் நாம் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.

அவருக்கு அறிகுறிகள் காணப்பட்டதே தவிர கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கூறமுடியாது” என தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியநிபுணர் சுதத் சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz