மெய்ப்பொருள் காண்பது அறிவு

ப்ரமித பண்டார தென்னகோன்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

- Advertisement -
கலேவலை பொது மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட 150 இலட்ச ரூபா நிதி தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினல் ப்ரமித பண்டார தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அது தொடர்பில் முறைப்பாடொன்றை கையளித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,”கலேவலை பொது மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட 150 இலட்ச ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நாம் இன்று முறைப்பாடொன்றை கையளித்தோம்.
நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் அங்கீகரீக்கப்பட்டு ஒப்பந்ததக் காரர்களுக்கு   இந்த விடயம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் ஏன் பொது மைதானம் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பது தொடர்பில்  ஆராய்ந்து அதில் தவறுகள் இடம்பெற்றிருப்பின் தவறிழைத்தவர்களுக்கு இந்த ஆணைக்குழு மூலம் உரிய தண்டனை வழங்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்” என ப்ரமித பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..!

13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

Developed by: SEOGlitz