மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்களே வழக்கு தொடர்ந்தனர் : சுசில் பிரேமஜயந்த!

- Advertisement -

தேர்தலை எதிர்க்கொள்ள முடியாத தரப்பினரே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அரசியலமைப்புக்கு அமைவாக தனக்கு உள்ள அதிகாரங்களை கொண்டும், மக்களின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுமே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தேவையான நாடாளுமன்றத்தை கொண்டு வருவதோடு, அதற்கு தகுதியான நபர்களை தேர்தெடுக்கவேண்டியும் உள்ளது.

தேர்தல் குறித்து ஜனாதிபதி வர்த்தமானி வெளியிடும்போது, நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் யாரும் இருக்கவில்லை. இதற்கு அமைவாகவே அடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க  தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை முன்னெடுத்தது.

இதனை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது சமகி சனபலவேகய கட்சியினாலேயே. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 7 மனுக்களில் 4மனுக்கள் சமகி ஜனபல வேகய சார்பானது.

முன்னைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

தேர்தலை எதிர்கொள்ள முடியாத தரப்பினரே இதனை முன்னெடுத்துள்ளனர் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்: ஜனாதிபதிக்கு கடிதம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,  ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில பத்தரிகையொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. இதற்கமைய....

Developed by: SEOGlitz