மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பாறையில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

- Advertisement -

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல்  தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு சந்திப்பிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.

இலங்கையில் பல ஆண்டுகளாக டெங்கு நோய் பாரிய  தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒன்றாக காணப்படுகின்றது. தற்போதைய நிலையிலும் டெங்கு தாக்கம் நமது கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

கொவிட்-19 தொற்று  காலத்தில் சுகாதார திணைக்களம் உத்தியோகத்தர்களும் தொற்று நோய்க்கு  எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும்  சமகாலத்தில் கொரொனா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளால் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளில் சற்று தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது.

எமது கல்முனைப் பிராந்தியத்தினைப் பொறுத்தளவில் 480 நோயாளிகள் முதல் ஐந்து மாத பகுதியில் இனங்காணப்பட்டார்கள்  ஆனால் இந்த வருடம் ஐந்து மாதங்களுக்குள் நோயாளர்களின் எண்ணிக்கை 840 ஆக இரட்டிப்பு நிலையாக அதிகரித்துள்ளது.

இதற்கு பல வேறுபட்ட காரணங்கள் எதுவாக அமைந்தாலும் இந்தப் பயங்கரமான நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக  கருதவேண்டியுள்ளது.

தற்போதும் மாலை வேளைகளில் குறைந்தளவு மழைவீழ்ச்சி எமது பிராந்தியத்தில் காணப்படுகின்றது மிகக் குறைந்த நீரில் டெங்கு நோய் பரவக்கூடிய நுளம்புகள் பெருகுவதால் இந்த நிலைமைதான் மிகவும் பிரச்சினைக்கு உரியதாக காணப்படுகின்றது.

சுகாதார துறையினர் கிணற்றுக்குள் மீன்குஞ்சுகளை வழங்கி நுளம்பு பெருகக்கூடிய இடங்களில் புகைகளை விசிறி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆட்கொல்லி நோய்க்கு பொதுமக்களின் பங்களிப்பு மிகப் பிரதானமானது கல்முனை பிராந்தியத்திற்கு மாத்திரமில்லை முழுநாட்டுக்குமே பாதுகாப்பாக அமையும்.

கல்முனை பிராந்தியத்தை பொறுத்தளவில் அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ,கல்முனை வடக்கு பிரதேசம், பொத்துவில் பிரதேசம் ,ஆகியவற்றில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் ஏனைய பகுதிகளிலும் தற்போது டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz