மெய்ப்பொருள் காண்பது அறிவு

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

- Advertisement -

ஊவா மற்றும் தென் மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி மறைந்த மார்ஷல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பு – ஜயரத்ன மலர்ச்சாலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுப் புத்தகத்தில், ஜனாதிபதி தனது அனுதாப செய்தியையும் பதிவு செய்தார்.

இதேவேளை, மார்ஷல் பெரேராவின் மனைவி தயா தர்மபந்து, மகனும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி டிலான் பெரேரா மற்றும் மகள் கிசோலி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜனாதிபதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

Developed by: SEOGlitz