மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டமைப்பு அரசியலிருந்து வெளியேற வேண்டும் : வவுனியாவில் எதிர்ப்பு!

- Advertisement -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியுள்ளது.

- Advertisement -

இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இளம் சமுதாயத்தினர் தான் தமிழர்களின் பிரச்சனையினை தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக இடைவெளியினை பேணியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட அவதானம்!

தொழிற்சாலைகளில் சுகாதார ஆலோசனைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில்,  முதலீட்டு சபை உன்னிப்பாக கண்காணிக்கும் என என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு...

நாடாளுமன்றத்தில் சஜித் – பவித்ரா வாக்குவாதம்!

அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள், நாடாளுமன்றத்தில் மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். சுகாதார நடைமுறைகள் உள்ளடக்கப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல், கடந்த 15...

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து : நால்வர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் Shanxi மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால்...

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

Developed by: SEOGlitz