மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் PCR பரிசோதனைகள்!

- Advertisement -

நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், ஹோட்டலான்றில் அல்லது வேறு தங்குமிடமொன்றில் தங்கவைக்கப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் இலங்கையர்கள் என்ற வகையில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான செயற்றிட்டத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இதுவரை 21 நாடுகளில் இருந்து 10 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் 18ஆயிரம் வரையிலான இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz