மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் திண்மக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

- Advertisement -

கிளிநொச்சியில் 84.4 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட திண்மக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த சுத்திகரிப்பு நிலையம் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

- Advertisement -

கிளிநொச்சி கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் அகற்றப்படும் திண்ம நீர்க்கழிவுகள் குறித்த நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு அவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நிகழ்வு இன்றுகாலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் யு.கே.ரணதுங்க மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வில் அதிகாரிகளால் குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் திண்மக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு! 1 கிளிநொச்சியில் திண்மக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz