மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

- Advertisement -

கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தற்காலிக குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்காலிக குடியிருப்பாளர்கள் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்யவேண்டும் என  மேல் மாகணத்திற்கு பொறுப்பான  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற  ரகசிய தகவலின் பிரகாரம் தொம்பே பகுதியில் சட்டவிரோதமான முறையில்  நடாத்திச் செல்லப்பட்ட மதுபான உற்பத்தி  நிலையம்   ஒன்று  நேற்று சோதனையிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேல் மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேஷபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல்  பதிவேட்டில் பதிவு செய்யப்படாத  அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும்  பொலிஸ் நிலையத்தில் தங்களை பதிவு செய்யவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு நிமித்தம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகணத்திற்கு பொறுப்பான  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேஷபந்து தென்னக்கோன்  மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

மஹவ – கெத்தக்கவ்வயில் அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மஹவ - கெத்தக்கவ்வ பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொது...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித்...

பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் மண்டபத்துக்கும் வருகை தந்துள்ளதாக தகவல்கள்...

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசு படலங்களின் அளவு சடுதியாக அதிகரித்துள்ளதாக...

Developed by: SEOGlitz