மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பொதுச்சந்தைகளின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பின!

- Advertisement -

யாழ்ப்பாணம், திருநெல்வேலி உள்ளிட்ட பொதுச்சந்தைகளின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.
தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் இன்றைய தினம் மீள திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 70 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையும் மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.
அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நல்லூர் பிரதேச சபையினரால் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியினை காலை 6- 12 மணி வரை ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பொதுச்சந்தைகளின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பின! 1 யாழ்.பொதுச்சந்தைகளின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பின! 2 யாழ்.பொதுச்சந்தைகளின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பின! 3
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை...

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

Developed by: SEOGlitz