மெய்ப்பொருள் காண்பது அறிவு

மணல் மண் ஏற்றிச் செல்வதற்கு நாளை முதல்  அனுமதி!

- Advertisement -

மணல் மண் ஏற்றிச் செல்வதற்கு நாளை முதல்  அனுமதி வழங்கப்படுமென சுரங்க பணியக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணல் மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

 இந்த நிலையில், மணல் இல்லாமை காரணமாக  கட்டட நிர்மாண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய  அனுமதி வழங்குவதற்கு சுரங்க பணியகம் தீர்மானித்துள்ளது.

இதேவேனை மணல் மண் ஏற்றிச் செல்வதற்கான நடைமுறைகள் குறித்தும் அனுமதி வழங்குவது தொடர்பிலும் தயாரிக்கப்பட்ட சுற்றறிக்கை நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  சுரங்க பணியக திணைக்களம்  தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்: ஜனாதிபதிக்கு கடிதம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,  ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில பத்தரிகையொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. இதற்கமைய....

Developed by: SEOGlitz