மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக அனுமதி : விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு!

- Advertisement -

பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில், கட்டம் கட்டமாக பல்கலைக்கழக  கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளமையினால் நாளைய தினத்துடன் பலகலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நிறைவடைய உள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட தேர்தல் செயலகத்துக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 15 திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அதற்கான உரிய அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு ஆகியன கல்வி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, விண்ணப்பங்களை தரவிறக்க விரும்புவோர், moe.gov.lk எனும் இணையத் தளத்தின் மூலம் தரவிறக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் அந்த இணையத் தள முகவரி: moe.gov.lk

இந்த நிலையில், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் அடிப்படையில், இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாக, கடந்த 5 வருடத்துக்கான வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு பிள்ளைகளை இணைத்துக் கொள்வதற்காக, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான தகவல்களை கிராம உத்தியோகத்தரிடம் அல்லது தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இயலுமானவரையில் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz