மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்திய பிரஜைகளை அழைத்துச் செல்வதற்காக விசேட கப்பல் இன்று வருகை!

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்திய பிரஜைகளை அழைத்துச் செல்வதற்காக விசேட  கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக  சுமார்  ஆயிரத்து 500 இந்திய பிரஜைகள்  நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுள்  176 பேர் கடந்த 29 ஆம் திகதி இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுமார்  700 பேர்  அடங்கிய குழுவினருடன்  நாளைய தினம் குறித்த விசேட கப்பல் மூலம் நாடு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆம் திருத்தத்தின் இராண்டாம் வாசிப்பு- முழு விபரம் உள்ளே!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருபதாம் திருத்த...

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

Developed by: SEOGlitz