மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாலைத்தீவில் இருந்து 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வருகை!

- Advertisement -

கொரோனா தாக்கம் காரணமாக மாலைத்தீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 291 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள்மாலே நகரில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 102 எனும் விமானமூடாக இன்று முற்பகல் 11. 36 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

வேலை நிமித்தம் மாலைத்தீவு சென்றிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பி.சி. ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பயணிகள் எவரேனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டால் குறித்த நபர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz