மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேகாலையில் தீ விபத்து!

- Advertisement -

கேகாலையில் அமைந்துள்ள பழைய சந்தைக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 4.40 அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் பழைய சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இந்த தீ விபத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதுடன், மின் கசிவினால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz