மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தலில் பொதுஜன பெரமுன அதிக இடங்களைக் கைப்பற்றும் : லக்‌ஷ்மன் யாப்பா!

- Advertisement -

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில்  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களை வெற்றிகொள்ளும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர  நாடாளுமன்றத் தேர்தலில்  இருந்து விலகியுள்ளமை தொடர்பில்  கொழும்பில் இன்று  கருத்துரைக்கையில் அவர்   இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“மங்கள சமரவீர சரியான தீர்மானத்தினையே எடுத்துள்ளார். தோல்வியை எதிர்கொள்வதற்கு முன்பாகவே அவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியானது ஜனாதிபதி தேர்தலில் கொண்டிருந்த ஆதரவினை தற்போது இழந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி  இரண்டாக பிரிந்துள்ளது. தேர்தலின் போது முன்வைப்பதற்கு அவர்களிடம் கொள்கை பிரகடனம் எதுவும் காணப்படவில்லை.

எனவே   நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மாத்தறை மாவட்டத்தில்  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களை வெற்றிகொள்ளும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz