மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் பகுதியளவில் நிறைவு!

- Advertisement -

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் பகுதியளவில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் இந்தத் தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதித் தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம், பதுளை, புத்தளம், களுத்துறை மற்றும் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் மூன்றாம் கட்ட தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

Developed by: SEOGlitz