நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அவதானம் செலுத்தியுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியைக் கோரியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெறுமாயின் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நாட்டிற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 6 நாடுகளைச் சேர்ந்த சுமார் 14 கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.