பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அப்படை சம்பளத்தை ஐக்கியத் தேசியக்கட்சி பெற்றுக்கொடுக்கும் என்பது பகல் கனவு என ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் 50 ரூபா கொடுப்பனவு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு, ஐக்கியத் தேசியக் கட்சி எதிராகவே செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மலையக மக்கள் ஐக்கியத் தேசியக் கட்சியை புரக்கணிக்க வேண்டுமெனவும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐக்கியத் தேசியக்கட்சி முதலாளித்துவத்தின் நலன் குறித்தே செயற்பட்டுவருவதாகவும், இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வர மாட்டாளர்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.