மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் திகதி தொடர்பில் 10ஆவது நாளாக இன்றும் பரிசீலனை!

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் 10ஆவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய, குறித்த மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

- Advertisement -

இதன்படி குறித்த மனுக்கள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மீண்டும் 10 ஆவது நாளாக இன்று  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  ஒன்பதாவது நாளாக கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இடைக்கால மனுவை தாக்கல் செய்த பேராசிரியர் பந்துல எதகம சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தை மீளவும் அழைக்குமாறு மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அத்தகைய நடவடிக்கைகள் குறித்து அரசியல் அமைப்பில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை...

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

Developed by: SEOGlitz