ஹப்புத்தளைப் பிரதேசத்தில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து ஹப்புத்தளை கெல்பன் தோட்டத்தில் குறித்த சிறுத்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த் தோட்டத்தின் தேயிலைச் செடிகளுக்குள் இருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றின் சடலத்தை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுத்தை சில நாட்களுக்கு முன்னர் இறந்துள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹப்புத்தளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சிறுத்தையின் உயிரிழப்புத் தொடர்பான பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தினை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.