எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ஜீவன் தொண்டமான் கையொப்பம் இட்டுள்ளார்.
கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக பெயரிடப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலமானதை தொடர்ந்து, அவரது இடத்திற்கு வேட்பாளர் வெற்றிடம் ஏற்பட்டது.
இதனையடுத்தே, குறித்த வெறிறிடத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவில் ஜீவன் தொண்டமான் இன்று கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.