பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 22 மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தொடர்பிலான குறித்த வர்த்தமானியே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்றைய ஊடகசந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் உள்ளடங்கிய விபரங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.