அமெரிக்க தூதரக அலுவலர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்த மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இன்று அதிகாலை 01.30 மணியளவில் வந்த அமெரிக்க நாட்டவர் ஒருவரே இவ்வாறு மருத்துவ பரிசோதனைகளை மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமெரிக்க நாட்டவர் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த குறித்த தூதரக அதிகாரி இராஜதந்திர சலுகைகளைப் பயன்படுத்தியதால் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என விமான நிலைய அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றிற்கு தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தூதரக அலுவலர் சர்வதேச நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே நடந்துகொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.