இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தமது நாட்டுச் சட்டத்தில் சில குழப்பநிலைகள் காணப்படுவதாக இங்கிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச் சிக்கல்கள் சில இருக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு கண்டால்தான், அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து நாட்டினது சட்டப்படி, இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணாமல் அவரை நாடு கடத்த முடியாது. எனவே இந்தக் குழப்பத்திற்கு விரைவில் தீர்வு காண்பதற்கு முயற்சித்து வருகின்றோம்.
ஆனால் எந்தக்காலப்பகுதி என்று உறுதியாகத் தெரிவிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவின் வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல், 2016-ம் ஆண்டு; இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவரை நாடு கடத்துமாறு இந்தியா விடுத்த கோரிக்கையினை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலண்டனில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் அரை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.