மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

- Advertisement -

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகு வைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

- Advertisement -

எனினும் அதன் அமைவிடம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசியல் தரப்பினரிடையே காணப்பட்ட இழுபறி நிலை காரணமாக குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போதும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாத காரணத்தினால் பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை கடந்த 03.06.2020 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்குரிய நடவடிக்கையில் வவுனியா மாவட்ட செயலகம் ஈடுபட்டுள்ளது.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றையதினம் துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்ததுடன் இன்று மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் கே.சபர்யா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு! 1 வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு! 2 வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

AstraZeneca -Covishield தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது -விபரம் உள்ளே!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford AstraZeneca Covishield தடுப்பூசி இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி AI-281 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம்...

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் 5 முக்கிய தீர்மானங்கள்!

புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவற்காக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை...

நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகள் எவ்வித பலனயைும் தரவில்லை -ஐ.நா. மனித உரிமை பேரவை கருத்து

இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிச்சல் பெச்சலட் அழைப்பு விடுத்துள்ளார், கடந்த 10...

மலையக ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

மலையக ரயில் மார்க்கத்திலான தெனுவர மெனிக்கே ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்தில் பதுளை நோக்கி பயணிக்கும் 1001 இலக்க தெனுவர மெனிக்கே...

Developed by: SEOGlitz