மெய்ப்பொருள் காண்பது அறிவு

வழமையான நேர அட்டவணையில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் – விபரம் உள்ளே!

- Advertisement -

வழமையான நேர அட்டவணையில் அனைத்து பகுதிகளுக்குமான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது  49 அலுவலக இரயில்களை, நாளை முதல்  வழமையான  கால அட்டணையின் கீழ் சேவையில்  ஈடுபடுத்த  தீர்மானித்துள்ளதாக ரயில்வே  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன் உரிய நேரத்தில் இரவு நேர தபால் ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய ரயில் சேவைகளும் நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், முதலாவது ரயிலான உத்தரதேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து அதிகாலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 6.10க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.

அத்துடன், யாழ்தேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.

மேலும், இரவு நேர தபால் புகையிரதம், காங்கேசன்துறையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6.45க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.

அத்துடன், நாளை முதல் அதிகாலை 3.45க்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ஶ்ரீதேவி ரயிலும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழமையான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் அதேவேளை, சுகாதார தரப்பினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள்  கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ் செம்மணி இந்து மயானத்தில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ கிராம் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு இன்று அதிகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் செம்மணி இந்து மயானத்தில் பை...

ஐ.ம.ச வின் இளைஞர் அணிக்கான புதிய நியமனங்கள் இன்று வழங்கிவைப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர்  அணிக்கான புதிய நியமணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்  அணியின் தேசிய அமைப்பாளராக சமித் விஜேசுந்தர தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,  ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்...

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – 1வது நாடளாவிய முயற்சி!

Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு - முதலாவது நாடளாவிய முயற்சி Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம்...

வடக்கு, கிழக்கின் சில பகுதிகளுக்கு திடீர் மின்வெட்டு..!

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனுராதபுர புதிய மின் விநியோக கட்டமைப்பில் இன்று மாலை 7.00 மணியளவில்  ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாகவே...

அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனை தாண்டியது..!

அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனையும், தொழிற்படு இலாபம் ரூ. 1  பில்லியனையும் தாண்டியது அமானா வங்கி, தனது துரித வளர்ச்சிக்கு சான்று பகிரும் மைல்கல்லாக, வங்கித் தொழிற்பாடுகளில் 9...

Developed by: SEOGlitz