ரஷ்யாவின் மொஸ்கோ நகர் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு ரஷ்யாவின் மொஸ்கோ நகரின் முடக்கச் செயற்பாடுகளை தளரந்த்தும் நடவடிக்கை முன்னெடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி மொஸ்கோ நகரில் உள்ள உணவகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தை முன்னிட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரஷ்யாவில் 4 இலட்சத்து 76 ஆயிரத்து 658 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 5 ஆயிரத்து 971 உயிரிழப்புகள் ரஷ்யாவில் கொரோனா வைரஸினால் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் முடக்கச் செயற்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ரஷ்ய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.