மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் விசேட அறிவிப்பு!

- Advertisement -

நாட்டின் தென்மேற்கு பிராத்தியத்தில் தொடரும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்குமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேல், வடமேல், சப்ரகழுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேல், வடமேல் மற்றும் சப்ரகழுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் இன்று பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில்...

Developed by: SEOGlitz