மெய்ப்பொருள் காண்பது அறிவு

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!

- Advertisement -

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றயதினம் ஆரம்பமானது.

குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது.

- Advertisement -

கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலயத்தை சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை வீதித் தடைகள் போட்டு ஆலயத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், ஆலயத்துக்கு வருகைதந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்! 1 வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்! 2 வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 131 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை

காசுமாலை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை…

ஆதித்ய வர்மா படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் அவரது சமூக வளைத்தளங்களில் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.  

நீதவான் நீதிமன்றத்தினால் அடைக்கலநாதனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவரை நாளை (24) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு...

பிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் ஆழ்ந்த சினிமா…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலாமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார். தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013...

Developed by: SEOGlitz