மெய்ப்பொருள் காண்பது அறிவு

லண்டனில் இருந்து நாடுதிரும்பியவர்கள் ஹோட்டல்களில் தங்கவைப்பு

- Advertisement -

லண்டனில் இருந்து நாடுதிரும்ப முடியாமல்  நிர்கதிக்குள்ளாகி இருந்த 278 இலங்கையர்கள்   நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலன்கன் எயார்லைஸ் விமான சேவைக்குச் சொந்தமான யு எல் 504 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.51 அளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

- Advertisement -

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதாக எமது விமான நிலைய   செய்தியாளர் தெரிவித்தார்.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை குறித்த பயணிகளை விமான நிலைய வளாகத்தில் உள்ள  நான்கு ஹோட்டல்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, குறித்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் அனைவரும் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப் படுவார்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..!

13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

Developed by: SEOGlitz