மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரத்னஜீவன் ஹுல் தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேற வேண்டும் : பியல் நிஷாந்த!

- Advertisement -

ரத்னஜீவன் ஹுல் தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”இனி நாடகங்களை நடத்தியது போதும் என தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவரிடம் நாம் கூறுகின்றோம்.

விரைவில் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தடுமாறிக் கொண்டிருக்காமல்  தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து விலக வேண்டும் என கோருகின்றோம்.

இல்லாவிடில் தமது தவறுகளை திருத்திக் கொண்டு இந்த தேர்தலை விரைவில் நடத்துமாறு கோருகின்றோம்.

இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன அதிசிறந்த வெற்றியை பெறும் போது எதிர்க்கட்சியினர் வரலாற்றில் மோசமான தோல்வியை பெற்றுக் கொள்வர்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லிங்குசாமியுடன் இணைந்து அசத்தப்போகும் தெலுங்கு நடிகை..!

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, பையா படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி,...

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐம்மு காஷ்மீர் லடாக் எல்லைப்பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட...

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் பலி..!

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் சோமாலிய தலைநகர் மொகாடிசு  நகரில் உள்ள உணவகம்  ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை  3 ஆயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட...

மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த விசேட திட்டம் முன்னெடுப்பு!

மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதற்கு புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பாதிப்பு...

Developed by: SEOGlitz